leader eng

கட்டுநாயக்க பண்டாரநாயக்க

சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று 21ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இலங்கை விமானப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதன்படி, (21ஆம் திகதி) மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

அத்துடன், (21ஆம் திகதி) இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிச் சென்றார்.

அத்துடன், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டார்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க  ஆகியோர் எமிரேட்ஸ் விமானமான ஈ.கே.-649 இல் அதிகாலை 03.30 மணியளவில் துபாய் நோக்கிச் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாததால் துபாய் வழியாக அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி