நாடு முகம் கொடுத்துள்ள டொலர் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விசேஷமான பொறுப்பொன்று உள்ளதாக நகர அபிவிருத்தி சச்பையின் புதிய தலைவராக இன்று (04) பொறுப்பேற்ற நிமேஷ் ஹேரத் அவர்கள் தெரிவித்தார்கள்.

எக் காரணம்கொண்டும் நகர அபிவிருத்தி அதிகார சபை திறைசேரியில் தங்கி இருக்கின்ற ஒரு நிறுவனமாக இருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக நிமேஷ் ஹேரத் இன்று (04) காலை பத்தரமுல்லை செத்சிறிபாய இரண்டாம் கட்டத்தில் அமைந்துள்ள அதிகார சபையில் சுப நேரத்தில் பதவியேற்றார். தகவல் தொழினுட்பத்தில் விஷேட கெளரவப் பட்டம் பெற்ற நிமேஷ் ஹேரத் கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் சிறந்த முன்னாள் மாணவர் ஆவார்.

இதற்கு முன்னர் சுற்றுலா சபையின் ஆலோசனை சபையின் உறுப்பினராக இருந்த அவர் விருந்தோம்பல் துறையின் ஊடாக அரச நிறுவனங்களில் வேலை திட்ட முகாமைத்துவம், வர்த்தக அபிவிருத்தி விற்பனை முகாமையாளர், மனித வள முகாமை, டிஜிட்டல் விற்பனை உட்பட பல துறைகளில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட தொழிலாண்மை அபிவிருத்தியுடைய ஒருவராவார்.

தனது கடமையை பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற வைபவத்தில் புதிய தலைவர் நிமேஷ் ஹேரத் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். அரச நிறுவனங்கள் நவீன தொழில்னுட்பத்துடன் செயல்பட வேண்டும். மேலும் அரச ஊழியர்கள் தங்கள் பழைய எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டு புதிய காலத்திற்கு ஏற்ற வகையில் பணியாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். நவீன உலகத்தோடு சேர்ந்து கையாளமல் நாம் பயணிக்க முடியாது. தற்போதைய எமது நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.

டொலர் பற்றாக்குறை அவற்றுள் முக்கியமானதாகும். இந்த டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு தேடுவது எப்படி என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். எங்களைப்.பராமரிக்க வேண்டிய பணத்தை நாங்களே தேடிக் கொள்ள வேண்டும் நகர அபிவிருத்தி.அதிகார சபை திறைசேரியில் தங்கி இருக்க முடியாது. அரசுக்குப் பாரமில்லாமல் வேலை செய்யுமாறு இந்தப் பதவியைப் பெற்றுக் கொள்ளும் போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எனக்கு ஆலோசனை கூறினார்.

அந்த வழிகாட்டுதலுக்கேற்ப நாமும் வேலை செய்வோம். படித்த, புத்திசாலியான செல்வந்தர்கள் மட்டுமல்ல ஏழையான எழுத்தறிவில்லாத கிராமவாசிகளும் இன்நிறுவனத்திற்கு சேவையைப் பெற்றுக் கொள்ள வருகிறார்கள். எனவே பணியாளர்கள் அனைவரும் பணி புரியும் போது உங்கள் முன் வரும் அனைவரயும் மனிதாபிமானத்துடன் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி