கொட்டாஞ்சேனையில் 15 வயதான பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டமைக்கு

காரணம் நாட்டில் சரியான நடைமுறை பின்பற்றப்படாமையே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் அரச தரப்பு எவ்வாறான நீதியை வழங்கப்போகிறது எனவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர்  கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் மாணவி தொடர்பான விடயத்தை பேசவிடாது எதிர்க்கட்சித் தலைவரை அமருமாறு கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ஆளும் தரப்பின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவி்க்கையில், குறித்த மாணவியின் உயிரிழப்பை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் மாணவியின் மரணத்தை விற்று அரசியல் நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவியின் விடயத்தை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VIDEO LINK

https://www.facebook.com/watch/?v=976953327795552&rdid=KnGw6YwwMbMVA5SW

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி