டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை - பொருளாதார ரீதியில் இந்தியாவுக்கான லாபம் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தைப் பிப்ரவரி 24 ஆம் தேதி தலைநகர் புதுடெல்லியில் தொடங்குகிறார். உலகில் அதிகபட்ச வல்லமை மிக்க மனிதரை வரவேற்பதில் அரசியல் மற்றும் வணிகம் தொடர்பான காரணங்களுக்காக இந்தியா உற்சாகம் கொண்டிருக்கிறது.