ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தாம் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா மற்றும் அதன் இலங்கைப் பணிப்பாளர் சென் சென் ஆகியோருக்குமிடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சஞ அறிவித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி