கர்நாடகா மாநிலத்தில், இன்று முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் செல்ஃபி எடுத்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என அந்த மாநில அரசாங்கம் உத்தர விட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொரானா தொற்றுக்கு இலக்காகிய ஒருவர் நேற்று (31) அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட வாட்டு தொகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் என சுகாதார சேவைகள் சிரேஷ்ட உத்தியோகத்தர் வைத்தியர் ஜெனரல் பபா பள்ளிஹவடன தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ´கொன்டேக் ஸ்ரீலங்கா´ அதாவது இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள் என்ற இணையதளத்தின் மூலம் இதுவரை 17000 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கண்டி, அக்குரணை பகுதியில் உள்ள ஒரு ஊர் முடக்கப்பட்டுள்ளது.அத்துடன் புத்தளம் கடையன் குளம் பகுதியில் உள்ள மக்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி