தேர்தல் திணைக்களத்தின் தலைவர் ஏப்ரல் 01ம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் டி.பி ஜயசுந்தரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக்கடிதத்தில் பாராளுமன்றத்தை மார்ச் 02 ம் திகதி கலைத்ததிலிருந்து 03 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தை கூட்டுவது சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாக தெரிய வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை செய்வது தொடர்பாக நிபுணத்துவம் மிக்க குழுவொன்றை நியமிக்க வேண்டும் என சுகாதார அமைச்சில் நேற்று (3) இடம்பெற்ற சந்திப்பின் போது வைத்தியர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இன்று (4) உயிரிழந்துள்ளார் ஆண் நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தங்களது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகதார அமைச்சிற்கு 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

COVID 19 வைரசால் தொளிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் அரசாங்கம் இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மூடி மறைத்து நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதானது இந்த நிலையை மூடி மறைத்து மக்களை வேறு வழியில் திசை திருப்புவதற்காகும்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் நிலவரம்:பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற மலேசியர்களைத் தேடி வருவதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோரை தேவைப்பட்டால் சுட்டுக்கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளை நாட வேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துச்செல்லும்  இவ்வேளையில் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைகள் செய்வது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வதால் எதிர்வரும் நாட்களில் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென வைத்தியர் சங்கம்  எச்சரித்துள்ளது இந்த நிலைமையை எதிர் கொல்வதற்கு நாட்டு மக்களை தயாராக இருக்குமாறும் கொரோனா வைறஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வைத்திய சங்கம் வெளியி ட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி