Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ன்டபிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டத்தின் மூலம் அரச வங்கிகளில் 15 இலட்சம் ரூபாய் வரை கடன்: மங்கள அறிவிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2019 • 6:03 PM

ன்டபிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டத்தின் மூலம் அரச வங்கிகளில் 15 இலட்சம் ரூபாய் வரை கடன்: மங்கள அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (08) யாழ்ப்பாணத்தில் அறிவித்தார்.
  • அதன்படி, 15 இலட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்குப் பிணை கோர வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
  • அதேவேளை முன்னாள் போராளிகளுக்கும் பிணையாளர்கள் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
  • காணாமற் போனவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (08) யாழ்ப்பாணத்தில் அறிவித்தார்.

வட மாகாணத்தின் இளைஞர் யுவதிகளுக்கு உதவும் முகமாக நடத்தப்படும் என்டபிரைஸ் ஶ்ரீ லங்கா திட்டத்தைப் பார்வையிடுவதற்காக விஜயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் போது, இந்தத்திட்டத்தின் ஊடாகக் கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பிணை கோரப்படுவதாகவும், பிணையாளர்களைத் தேடுவதற்குத் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதற்கிணங்க அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, 15 இலட்சம் ரூபாய் வரை கடன் பெறுவதற்குப் பிணை கோர வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் விதவைகளுக்குக் கடன் வழங்குவதில் அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று பிணையாளர்கள் இருவரைக் கோருவதிலிருந்து விலக்களிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கும் பிணையாளர்கள் அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ் கச்சேரியில் விதவைகள் மற்றும் சிறிய தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், திறைசேரியின் உயர் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் முதலானோருடன் தனியான சந்திப்பையும் மேற்கொண்டார்.யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காணாமற் போனவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளவும் காணாமற் போனவர் தொடர்பான இல்லாமை சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் காணாமற் போனோர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...