Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
காணொளிகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு!

T

The Leader Desk

மே 8, 2026 • 5:35 AM

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பத்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
  • இதுவரை 254 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
  • மொத்தம் 259 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன." புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மேலும் சில தடையப் பொருட்கள் (பொருட்கள்) இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • "அகழ்ந்தெடுக்கப்பட்ட 14 தடையப் பொருட்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
எழுத்து அளவு:

மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பத்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் மே 7 வியாழக்கிழமை ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்கையில்;

செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் இதுவரை 254 பேருக்குச் சொந்தமான எலும்புகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6, 7) மீட்கப்பட்ட 5 எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை சிறுவர்களுடையது என்றும் குறிப்பிட்டார்.

"இன்று இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதுவரை 254 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 259 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன."

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மேலும் சில தடையப் பொருட்கள் (பொருட்கள்) இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"அகழ்ந்தெடுக்கப்பட்ட 14 தடையப் பொருட்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. தடையப் பொருட்களின் இலக்கம் 82 முதல் 96 வரையிலான பொருட்களே இன்று நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டன."

அரசாங்கத்திடமிருந்து 210 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு மாத இடைவெளிக்குப் பின்னர் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் செல்வனாயகம் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலில் இந்த அகழ்வுப் பணிகள் முதன்முதலில் 2025 மே 15 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

2025 செப்டம்பர் 06 அன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த போது, சிறுவர்கள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரையிலான ஆழத்திலேயே கண்டெடுக்கப்பட்டிருந்தன.

சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஏப்ரல் 30, 2026 அன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்; இரண்டாம் கட்ட அகழ்வின் போது எடுக்கப்படாமல் எஞ்சியிருந்த ஒரு மனித எலும்புக்கூடு இன்னும் அகழ்விடத்திலேயே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

செம்மணி புதைகுழியில் இதுவரை மீட்கப்பட்ட 96 தடையப் பொருட்களில் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் உள்ளடங்குகின்றன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

P 02

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...