எதிர்வரும்  3 ஆம் திகதி ஞாயிறன்று  ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமூக வளைத் தளங்களில் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்துக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  அன்றைய தினம்  இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் அன்றைய தினம்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் எந்த  தீர்மானமும் இதுவரை  எடுக்கப்படவில்லை என  சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

பொலிஸார் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை மதிப்பதாகவும், அதனால் குறித்த  ஆர்ப்பாட்டம் தொடர்பில் எந்த தடைகளையும் பொலிஸார் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லை மீறி  பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு சென்றால் பலப் பிரயோகம் செய்ய வேண்டி ஏற்படும் எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி