மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 6000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்க Lanka IOC நிறுவனம் முன்வந்துள்ளது.

இலங்கை மக்களின் நல்வாழ்வில் தாங்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும் அதன் பிரதான நோக்கத்துடன் செயற்படுவதாகவும் Lanka IOC தெரிவித்துள்ளது.

LIOC இன் திருகோணமலை முனையத்தில் இருந்து 33,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பவுசர்களைப் பயன்படுத்தி 24 மணிநேரமும் எரிபொருள் கிடைக்கப்பெறுச் செய்துள்ளதாக LIOC நிர்வாகப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில் சில இடைக்கால நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதில் எங்களின் மிதமான பங்களிப்பு, மின் நெருக்கடி காரணமாக உருவாக்கப்பட்ட சவாலான சூழ்நிலையைத் தணிக்க நீண்ட காலம் முன்னெடுக்க தொடரும் என நாங்கள் மிகவும் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் எரிபொருளை உறுதி செய்யும் அதே வேளையில் மின்சார நெருக்கடியை குறைப்பதற்கும் 6,000 MT எரிபொருளை இலங்கை IOC வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகளை செய்துள்ளது என குப்தா மேலும் கூறினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி