குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உரிய முறையில் விசாரணைகளை

நடத்தினால் அஜித் நிவார்ட் கப்ரால் எந்த நேரத்திலும் சந்தேக நபராக மாறலாம்.  எனவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நிரந்தரமாக நீக்க முடியாது என கோட்டை நீதிவான் கோசல சேனாதீர தெரிவித்தார்.

அஜித் நிவாட் கப்ரால்  சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நிரந்தரமாக நீக்குமாறு கோரி சட்டத்தரணி திலின வீரசிங்க விடுத்த கோரிக்கையை நிராகரித்த போதே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நியாயமான காரணத்தை முன்வைத்தால் அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடையை குறுகிய காலத்துக்கு நீக்க முடியும் என நீதிவான் கோசல சேனாதீர  மேலும் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு தினியாவல பாலித தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் நிதிச் சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி