அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.



எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

அரசாங்க சுயாதீனக் கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்து கட்சிகளின் கூட்டணி தேர்தலில் தனித்துப் போட்டியிட முஸ்தீபு

இதேவேளைஇ அரசாங்கத்தில் உள்ள பத்து சுயாதீனக் கட்சிகளும் அடுத்த தேர்தலில் தனியான கூட்டணியாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவராக தனது கூட்டணியை மேலும் விரிவுபடுத்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார்.

“நாங்கள் ஜனநாயகத்தை மிகவும் மதிக்கும் குழு. எனவே இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தனி முன்னணியில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமது குழுவும் நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரங்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதகமானவை என தமது குழு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு ஆளும் கட்சியில் இருந்து சுயேட்சையாக மாறியபோது 11 கட்சிகளாகப் பிரிந்த போதிலும்இ இந்தக் குழுவிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியதால் தற்போது 10 கட்சிகள் மட்டுமே அந்தக் குழுவில் உள்ளன.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி