தென்மேற்கு சீனாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற
கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யுன்னான் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்பு ஆடை அணிந்த நபர் ஒருவர் இரண்டு கத்திகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அந்த நபர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை