கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை  மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள் வங்கியின் தலைவரினால் தனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் குறித்த கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை வெளியிட்டதற்காக கோப் குழுவிலிருந்து என்னை நீக்கினாலும் அது தொடர்பில் கவலைகொள்ளப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர்.

இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார்.

அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில்  நாடாளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

.குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது.மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள்.தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது.இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.

கடன்பெறப்போகும்போத வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே.ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி