மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட உள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திரஜித் குமாரசுவாமி தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

''கொள்கை முடிவுகளில் பாரபட்சம் இல்லை'' - மத்திய வங்கி ஆளுநர்

இதேவேளைஇ இலங்கை மத்திய வங்கியின் நல்ல கொள்கை முடிவுகளுக்கு கட்சி பேதமின்றி ஆதரவு வழங்குமாறு அரசியல் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று (24) பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கஇ நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு நேற்று அழைக்கப்பட்டுள்ளனர்.



அந்தக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த கோரிக்கை விடுத்தார்.

பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்றுக் காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

இதேவேளைஇ நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்துஇ நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படவுள்ள கொள்கை தீர்மானங்கள் மற்றும் அதற்கான முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து உடனடியாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கடன் வரம்பை ரூ.1 ரில்லியனாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையின் யதார்த்தங்களை மறைக்க வேண்டாம் என்றும் குறுகிய அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதமின்றி நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கு ஆதரவளிக்குமாறும் ஆளுநர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக எரிபொருள் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் எதிர்ப்பின் மத்தியில் அதனை செயற்படுத்த முடியாத நிலையில் இன்று மீண்டும் அதனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்த மத்திய வங்கியின் ஆளுநர், உலக வங்கியின் உதவியுடன் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் போன்ற நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளமையினால் டொலர்களை கொள்வனவு செய்வதற்கான ரூபா பணம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், முதலாவது தொழில்நுட்பப் பிரிவு தொடர்பான கலந்துரையாடலுக்கான கடைசி நாள் நேற்றைய தினம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த 3-4 மாதங்களில் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் தொடர்புடைய IMF உடன்படிக்கைகளை முடிப்பது சவாலானதாக இருக்கும் என்றார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி