தமிழகத்தின் 23-வது முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்ணர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். 

கொரோனா தொற்றுநோயிலிருந்து கைதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கையில் சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளருடன் தொடர்ந்து செயற்பட முடியாது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது   இன்று காலை ஒன்பது முப்பது மணி  அளவில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற 47வது அமர்வின் போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க நுகேகொடை நீதவான் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்றங்கள் தீர்மானித்துள்ளன.

தெற்கில் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்நிற்கத் தயார் என வடக்கின் தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன வேறுபாட்டை பொருட்படுத்தாமல், பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க வடக்கு, தெற்கு என பாகுபாடின்றி செயற்படத் தயார் என யாழ். ஊடக மையம் அறிவித்துள்ளது.

நாட்டை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

கரைத்துறைப்பற்றில் எட்டு கிராமங்களது காணி நிருவாகத்தினை மகாவலியின் கீழ் கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும்.

நிர்வாக நியமனங்கள் வழங்குவதற்கு கருதப்படும் அடிப்படை கல்வித் தகுதிகளைப் பொருட்படுத்தாமல், மருத்துவமனை பணிப்பாளர், துணைப் பணிப்பாளர், மருத்துவ கண்காணிப்பாளர், அரசு மருத்துவமனைகளில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் என அதே பதவிகளை மருத்துவர்களுக்கும் வழங்குமாறு இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவ சங்க அரசாங்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றிவருவதை, தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும், கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றியமைக்க அம்மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.

இலங்கை மக்கள் கொவிட் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் மாளிகையில் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். `அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?' என்ற விவாதமும் முடிவுக்கு வரவில்லை. என்ன நடக்கிறது தி.மு.கவில்?

குருநாகல், மத்தளை, லுணுகம்வெஹெர மற்றும் பெலிஅத்த ஆகிய நகரங்களை முழுமையாக நவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி