நவாலி - ஆனைக்கோட்டை பிரதான வீதி அகலிப்புப் பணிகள் தந்போது நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடான நிலை காணப்படுவதாக தெரியவருகின்றது.

வீதியினை அகலப்படுத்தும் நோக்கில் வொலி சென்.பீற்றர் முன்னாள் உள்ள நான்கு பெரிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயற்பட்டமையினைக் கண்டித்து மக்கள் குறித்த அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் செயலாளர் மற்றும் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையினை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் குறித்த மரத்தினை வெட்டக்கூடாது என மக்களினால் கிராம உத்தியோகத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினை வழங்கியிருந்த நிலையில், பதில் ஏதும் வழங்காது நேற்றைய தினம் குறித்த மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனர்.

மேலும் குறித்த மரங்களினை வெட்டாதுவிடின் வீதியினை அகலப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க மாட்டோம் என வீதி அபிவிருத்தி செய்யும் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர் என பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி