முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரி ஹட்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜூலை 18, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த போராட்டத்தை மலையக மக்கள் முன்னணியும், மலையகத் தொழிலாளர் முன்னணியும் ஏற்பாடு செய்திருந்தன.

wathukaraya 2021.07.20

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குடும்ப உறுப்பினர்கள் மீது பொரெல்ல பொலிசார் சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தனர், அவர் முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது சிறுமியை தீ வைத்துக் கொலை செய்துள்ளார்களா?அல்லது சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விசாரணையை நடத்திய பொரெல்ல மருத்துவமனையின் மரண விசாரனை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சிறுமி சில காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 17 ம் திகதி,பொரல்ல பொலிசார் முன்னாள் அமைச்சரின் ஊழியரை அவரது வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரித்தனர்.

மரணித்த சிறுமி ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வசிப்பவர் என்றும் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு 15 வயது 11 மாத வயதில் ஒரு ஊழியராக அழைத்து வரப்பட்டார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக் கோரிய ஹட்டன் நகரில் எதிர்ப்பாளர்கள், சிறுவர்கள் பணிக்கமர்த்துவது சிறுவர்களின் உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டினர்.

கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோட்டப் பகுதிகளில் உள்ள சிறிவர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.

சிறுமியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றங்களுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு ஏற்படாதவாறு  தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்க்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி