அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் 11 தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அந்தக் கோரிக்கைக்கு இணங்கவில்லை.

கட்சித் தலைவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், இது தொடர்பாக பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தமது கருத்துக்களுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க மாட்டார் என கவலையடைந்த அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் திரான் அலஸ் அலுவலகத்தில் கூடி ஜனாதிபதியை மேலும் பின்பற்றுவதில் அர்த்தமில்லை எனவும் தாங்கள் தனித்து செயற்படுவதாக ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். உள்ளக விவாதத்திற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் மக்களிடம் சென்று விஷயங்களை விளக்க வேண்டும் என தீர்மாணித்துள்ளனர்.

இதையடுத்து, அரசு சார்பு தொழிற்சங்க தலைவர்கள் வரவழைக்கப்பட்டு, யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளை (29) பிற்பகல் 3.00 மணிக்கு எத்துல்கோட்டே சோலிஸ் மண்டபத்தில் பொதுக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்திக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி