கிளிநொச்சி மாவட்டத்தில், வனவளத்  திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (27) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில், வன வளத் திணைக்களத்தின்  கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் பயிர்ச் செய்கை காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்ட்டன.

குறிப்பாக, ஆனைவிழுந்தான் பகுதியில், வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  600 ஏக்கர் வரையான நிலப்பரப்பு மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்தால்  கையகப்படுத்தப்பட்டுள்ள  காணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், கரைச்சி பிரதேச செயலாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், கமநல  அபிவிருத்தி உதவி ஆணையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், வனவளத் திணைக்களத்தின் ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி