இலங்கையின் ஹங்குரன்கெத்த - ரூக்வூட் தோட்டத்தில் வசிக்கும் முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் சிறுவன் சஞ்ஞீவன் பலரையும் வியக்க செய்துள்ளார்.

பிறப்பில் இரண்டு கைகளும் அற்ற நிலையில் 2013 ஆம் ஆண்டு  மே மாதம் 05  ஆம் திகதி கண்டி வைத்திய சாலையில் பிறந்த சஞ்ஞீவன் இறைவன் கொடுத்த இரு கால்களினால் தனது அனைத்து கடமைகளை பூர்த்தி செய்து வரும் திறமை படைத்தவர்.

சிறுவன் சஞ்ஞீவனின் தந்தை தலைநகரத்தில் கூலி தொழில் செய்து வரும் நிலையில் தாயார் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இரு சகோதரிகளுக்கு ஒரே ஒரு சகோதரனான சஞ்சீவன் ரூக்வூட் தமிழ் வித்தியாலையத்தில் தரம் மூன்றில் கல்வி பயின்றுவரும் ஒரு திறமைசாலியான  மாணவன் ஆவார்.

தனது இரு கால்களினால் முத்து போன்ற மூன்று மொழிகளிலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகவும் வல்லவர். அதோடு ஏனைய பல விளையாட்டு திறமைகளை அவனது கால்கள் மூலம் காட்டும் திறமை அப்பிரதேச மக்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தன்னிடம் உள்ள குறையை பொருட்படுத்தாது சஞ்ஞீவன் இந்த திறமைகள் பல்லரையும் ஈர்த்துள்ளதுடன், குறையோடு பிறந்தாலும்  அதனை பொருட்படுத்தாது தனது அயராத முயற்சியினால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ள இச்சிறுவனுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி