செய்திகள்
Showing page 969 of 1201 (18,013 articles)

இணைந்து செயற்பட ஜேவிபிக்கு விருப்பமில்லையா !மனோ கணேசன்
சிறுபான்மையினருடன் இணைந்து செயற்பட ஜேவிபிக்கு விருப்பமில்லையா? என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமெந்துக்கும் வரிசை!
நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சீமெந்து வாங்க மக்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. சிமெந்து தட்டுப்பாடு காரணமாக சிமெந்து தொடர்பான பல தொழில்கள் முடங்கியுள்ளதாக சீமெந்து வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை - போமுவெல பிரதேசத்தில் பொலிசார் மீது பெண்கள் தாக்குதல்!
களுத்துறை - போமுவெல பிரதேசத்தில், சட்டவிரோதமாகக் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவர்களைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது சந்தேக நபரும், பெண்கள்

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் சீரொளி மூலம் பரப்புரை!
ஸ்கொட்லாந்தில் இலங்கை தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் அதற்குரிய முன்னோடி பரப்புரைகள் அடுத்தடுத்து வித்தியாசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

சீனர்கள் சேர்ந்து செய்கிறார்கள்! மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில்!!
மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீன தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையில் உள்ள சீன தூதரகம், பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், சீன வர்த்தக அமைச்சுக்கு இன்று (29) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'பசிலின் சண்டித்தனமான பேச்சுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்' ! ரத்ன தேரர் ஜனாதிபதியிடம் நேருக்கு நேர் தெரிவித்துள்ளார்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சண்டித்தனமான பேச்சுக்களால் என்னை பயமுறுத்த முடியாது என அத்துரலியே ரத்ன தேரர் அரச தலைவர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

‘பேஸ்புக்’பெயர் மாற்றம்: புதிய பெயர் “மெட்டா”!
பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய பெயராக மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

அதிகாரத்தைக் கைப்பற்ற “ஒவ்வொரு அரசாங்கமும் படுகொலை செய்தது”!
ஆட்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மக்களைக் கொன்று காணாமல் ஆக்குவது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக, நாட்டின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு கிடைக்காத இரசாயன பசளை தோட்ட உரிமையாளர்களுக்கு கிடைக்கும்!
பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பசளையை வழங்க ராஜபக்ச கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாளை முதல் புதிய காற்று... விமல் உள்ளிட்ட தலைவர்களுக்கு 50 மில்லியன் ஏலம்!
யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக கண்டனப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் முடிவால் அரசாங்கத்தின் கூட்டாளிகள் பீதியடைந்துள்ளனர் இதனால் கூட்டு கட்சிகளின் தலைவர்களை வசப்படுத்தும் பாரிய நடவடிக்கையை அரசாங்கத்தின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கால்களினால் அனைத்து கடமைகளையும் பூர்த்தி செய்து வரும் ரூக்வூட் தோட்ட சிறுவன்!
இலங்கையின் ஹங்குரன்கெத்த - ரூக்வூட் தோட்டத்தில் வசிக்கும் முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் சிறுவன் சஞ்ஞீவன் பலரையும் வியக்க செய்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டனர்! சிறிதரன்
ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நன்மாறன் காலமானார்!
மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நன்மாறன், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது வயது 72.

கோட்டா தமிழ் மக்களின் மனதை சீண்டினால் அந்த வெறுப்பின் வெளிப்பாட்டை காலப்போக்கில் புரிந்து கொள்வார்! சம்பந்தன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் மனதைச் சீண்டிக் கருமங்களை நிறைவேற்ற விரும்புவன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘விமல் வீரவங்ச குழுவினரின் வேலை’ அதிர்ச்சியில் ஜனாதிபதி!
அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) அழைப்பு விடுத்துள்ளார்.

