Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சீமெந்துக்கும் வரிசை!

T

The Leader Desk

அக்டோபர் 30, 2021 • 4:17 PM

சீமெந்துக்கும் வரிசை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொழில் வீழ்ச்சியால் சீமெந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யுமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அதன்படி சீமெந்து கொள்வனவு செய்வதற்கு இன்று (30) அதிகாலை 3.00 மணி முதல் தம்புள்ளையில் உள்ள கடையொன்றுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியிருந்ததாக சீமெந்து பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • தம்புள்ளை, தம்புள்ளை கிராமத்தை அண்மித்த கடையொன்றுக்கு நேற்றிரவு (29) சீமெந்து லொறி வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இவ்வாறு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எழுத்து அளவு:

தொழில் வீழ்ச்சியால் சீமெந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யுமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சில பிரதேசங்களில் சீமெந்து பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்துநிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதன்படி சீமெந்து கொள்வனவு செய்வதற்கு இன்று (30) அதிகாலை 3.00 மணி முதல் தம்புள்ளையில் உள்ள கடையொன்றுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியிருந்ததாக சீமெந்து பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை, தம்புள்ளை கிராமத்தை அண்மித்த கடையொன்றுக்கு நேற்றிரவு (29) சீமெந்து லொறி வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இவ்வாறு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 3.00 மணி முதல் பல்வேறு நேரங்களில் மக்கள் வந்து கடைகளை திறக்கும் வரை வரிசையில் நின்றதாகவும் , ஒருவருக்கு 5 மூடை சிமெந்தே வழங்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

கடை ஊழியர் வாடிக்கையாளர்களின் வருகையைப் பார்த்து பட்டியலைப் பெற்று மக்கள் தொகைக்கு ஏற்ப சீமெந்து விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வரிசையில் நின்ற பலர், கடந்த காலத்தில் சிமெந்து வாங்குவதற்கு இவ்வளவு சிரமப்பட்டதில்லை என கூறியுள்ளனர்.

உலகில் தற்போது நிலவும் சூழ்நிலையால் நாடு இவ்வாறான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...