Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் சீரொளி மூலம் பரப்புரை!

T

The Leader Desk

அக்டோபர் 29, 2021 • 4:21 PM

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் சீரொளி மூலம் பரப்புரை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இது போன்ற பரப்புரை வியூகங்களைச் சமாளிக்க முடியாமல் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகம் தடுமாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • பிரித்தானிய தமிழ்மக்களின் இந்த நகர்வுகள் லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கிய கட்டடங்களில் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் மின்னொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.
எழுத்து அளவு:

புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இது போன்ற பரப்புரை வியூகங்களைச் சமாளிக்க முடியாமல் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகம் தடுமாறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கிய கட்டடங்களில் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் மின்னொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஸ்கொட்லாந்தை தளமாககொண்டு வெளிவரும் முக்கிய பத்திரிகைகளில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் ஸ்கொட்லாந்து வருவதான அடிப்படையில் ஆக்கங்கள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கிய கட்டடங்களில் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் சீரொளி மூலம் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரித்தானிய தமிழ்மக்களின் இந்த நகர்வுகள் லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் கிளாஸ்கோ ஒன்றுகூடலை தடுக்கும் வகையில் தற்போது லண்டனில் தங்கியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிசும் லண்டனில் உள்ள இலங்கை தூதரகமும் கடும் பிரயத்தனங்களை எடுத்துவரும் நிலையில் இந்த மின்னொளி பரப்புரைகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான முன்னோட்டப் பரப்புரைகளால் உற்சாகம் அடைந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று அதிகளவில் கிளாஸ்கோ நகரில் ஒன்று கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

லண்டனில் தற்போது தங்கியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு ஆதரவான ஒரிரு தமிழ் அமைப்புக்களுடன் இரகசிய தொடர்பாடலை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...