Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘விமல் வீரவங்ச குழுவினரின் வேலை’ அதிர்ச்சியில் ஜனாதிபதி!

T

The Leader Desk

அக்டோபர் 28, 2021 • 6:57 AM

‘விமல் வீரவங்ச  குழுவினரின் வேலை’ அதிர்ச்சியில் ஜனாதிபதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் 11 தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அந்தக் கோரிக்கைக்கு இணங்கவில்லை.
  • உள்ளக விவாதத்திற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் மக்களிடம் சென்று விஷயங்களை விளக்க வேண்டும் என தீர்மாணித்துள்ளனர்.
  • அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளை (29) பிற்பகல் 3.00 மணிக்கு எத்துல்கோட்டே சோலிஸ் மண்டபத்தில் பொதுக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

இதன்படி, ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் 11 தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அந்தக் கோரிக்கைக்கு இணங்கவில்லை.

கட்சித் தலைவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், இது தொடர்பாக பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தமது கருத்துக்களுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க மாட்டார் என கவலையடைந்த அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் திரான் அலஸ் அலுவலகத்தில் கூடி ஜனாதிபதியை மேலும் பின்பற்றுவதில் அர்த்தமில்லை எனவும் தாங்கள் தனித்து செயற்படுவதாக ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். உள்ளக விவாதத்திற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் மக்களிடம் சென்று விஷயங்களை விளக்க வேண்டும் என தீர்மாணித்துள்ளனர்.

இதையடுத்து, அரசு சார்பு தொழிற்சங்க தலைவர்கள் வரவழைக்கப்பட்டு, யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளை (29) பிற்பகல் 3.00 மணிக்கு எத்துல்கோட்டே சோலிஸ் மண்டபத்தில் பொதுக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்திக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘விமல் வீரவங்ச குழுவினரின் வேலை’ அதிர்ச்சியில் ஜனாதிபதி! | Tamil Leader | We Lead the Nation