Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

களுத்துறை - போமுவெல பிரதேசத்தில் பொலிசார் மீது பெண்கள் தாக்குதல்!

T

The Leader Desk

அக்டோபர் 30, 2021 • 3:39 PM

களுத்துறை - போமுவெல பிரதேசத்தில் பொலிசார் மீது பெண்கள் தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
  • பெண்கள் மூவரும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மூவரும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போமுவெல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தித் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து விசேட சுற்றிவளைப்பு குறித்த பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.

இதன்போது கசிப்புடன் ஒருவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவர முற்பட்டபோது சந்தேக நபரும் பெண்கள் மூவரும் இணைந்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதையடுத்து நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

களுத்துறை - போமுவெல பிரதேசத்தில் பொலிசார் மீது பெண்கள் தாக்குதல்! | Tamil Leader | We Lead the Nation