Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

UNHRC யில் தமிழர் தரப்பின் ஆதங்கம்!

T

The Leader Desk

மார்ச் 20, 2021 • 3:50 PM

UNHRC யில் தமிழர் தரப்பின் ஆதங்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதில் மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரின் அறிக்கைக்கும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களின் அறிக்கைக்கும் நன்றி தெரிவித்தார்.
  • ஆனால் தமிழர்கள் அமைப்புசார்ந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் தங்களது அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
  • ஏனென்றால் அதில் ஈழத்தமிழர்ககளுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துவிதமான இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார்கள்.
எழுத்து அளவு:

ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) சார்பாக கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 10/03/2021 அன்று இடம்பெற்ற பிரிவு 3 - அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் ஏபிசி தமிழ் ஒலி (ABC Tamil Oli) அமைப்பின் சார்பாக சுபத்திரா வரதராயா தங்களது உரையை வழங்கினார்.

அதில் மனித உரிமை பேரவையின் உயர் ஆணையரின் அறிக்கைக்கும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களின் அறிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். ஏனென்றால் அதில் ஈழத்தமிழர்ககளுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துவிதமான இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார்கள்.

ஆனால் தமிழர்கள் அமைப்புசார்ந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் தங்களது அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி இன்று பிரதமராக மாறினார். அவரது சகோதரர் ஜனாதிபதியாக மாறினார்.

இவர்களது 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழ் மக்கள் தங்களது சுதந்திரம், அடையாளம், சமயம், நிலம், தங்களது இறந்த உறவுகளை நினைவு கூரும் உரிமை, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரும் உரிமை, கருப்பு ஜுலையை நினைவு கூரும் உரிமை, 17 நாட்கள் நீரின்றி, உணவின்றி தனது வாழ்வை ஈகம் செய்த தியாக தீபனை நினைவு கூரும் உரிமை ஆகியவற்றை தொடர்ந்து இழந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

UNHRC யில் தமிழர் தரப்பின் ஆதங்கம்! | Tamil Leader | We Lead the Nation