Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

UNHRC இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியாவின் ஆதரவை பெற பிரித்தானியாவின் புதிய முயற்சி!

T

The Leader Desk

மார்ச் 17, 2021 • 3:15 PM

UNHRC இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியாவின் ஆதரவை பெற பிரித்தானியாவின் புதிய முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிளுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இலங்கை தொடர்பான பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கும் என இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளன.
  • இராஜதந்திர வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எழுத்து அளவு:

தற்போது இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிளுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜதந்திர வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உயர் மட்ட அதிகாரிகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரு தரப்பினரும் பெரும்பாலும் இந்தியாவுக்கும் பிரித்தானியாவிற்கு இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய விடயங்களில் பலவிதமான பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர்.

இலங்கை தொடர்பான பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கும் என இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பான கோர் குழு சார்பாக பிரித்தானியா ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஏற்கனவே ஆதரவை வழங்கியுள்ளன, எனினும் இந்தியா எடுக்க வேண்டிய நிலைப்பாடு முக்கியமானது.

இந்த தீர்மானம் தொடர்பில் வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருந்தார், அவர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...