Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர் ரணில் அமைச்சர் சஜித்jத்திடம் வலியுறுத்து!

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2019 • 5:32 PM

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர் ரணில்  அமைச்சர் சஜித்jத்திடம் வலியுறுத்து! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்திலே ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை குறித்து இரண்டுபேரும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.
  • இதில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின் ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதித் தலைவர் சஜித் தான் ஒருபோதிலும் கட்சியின் யாப்பினை மீறிய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை எடுத்துக்கூறியிருந்தார்.
எழுத்து அளவு:

இணக்கம் தெரிவித்துள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வலியுறுத்தியுள்ளார். 

இந்தவார இறுதிக்குள் இறுதித்தீர்வு ஒன்றினை எட்ட பிரதமர் ரணில் - அமைச்சர் சஜித் பிரேமதாச இடையிலான பேச்சுவர்த்தையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று இரவு இடம்பெற்றது. 

இரவு 9.40 தொடக்கம் 11.30 மணிவரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது அதில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயங்களே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டிருந்தது. 

நேற்று  பிற்பகல் 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் இரவு 9.40 மணியளவிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

கடந்த சந்திப்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் பிரதமருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதிலும் கூட நேற்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சார்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன்  அமைச்சர்களான கபீர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர். 

சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்துகொள்வார் என கூறப்பட்ட போதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. 

எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்திலே ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை குறித்து இரண்டுபேரும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின்  ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதித் தலைவர் சஜித் தான் ஒருபோதிலும் கட்சியின் யாப்பினை மீறிய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை எடுத்துக்கூறியிருந்தார். தான் கட்சிக்குள் வீணான குழப்பங்களை ஏற்படுத்தவில்லை எனவும் கட்சியையும் அரசாங்கத்தையும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு இருப்பதாக அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளார். 

ஊடகங்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர் இறங்கசியமாக ஒப்பந்தங்களை செய்துகொண்டு தான் அரசியல் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்ற காரணிகளை கூறியுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...