Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

இரவல் வாங்கிய புத்தகத்தை 63 ஆண்டுகளின் பின் திருப்பிக்கொடுத்த பெண்!

T

The Leader Desk

மார்ச் 24, 2021 • 7:50 AM

இரவல் வாங்கிய புத்தகத்தை 63 ஆண்டுகளின் பின் திருப்பிக்கொடுத்த பெண்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தைச் சேர்ந்த பெட்டி டயமண்ட் என்ற பெண்மணியே இவ்வாறு புத்தகத்தை திருப்பிக்கொடுத்துள்ளார்.
  • காலப்போக்கில் அந்தப் புத்தகத்தைப் பற்றி அவர் மறந்துவிட்டார்.
எழுத்து அளவு:

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தைச் சேர்ந்த பெட்டி டயமண்ட் என்ற பெண்மணியே இவ்வாறு புத்தகத்தை திருப்பிக்கொடுத்துள்ளார். அவர் கூடவே 500டொலர் நன்கொடையையும் குவீன்ஸ் பொது நூலகத்திற்கு அனுப்பியுள்ளார். 

புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய திகதி கடந்து விட்டதால், அதை நூலகத்திற்குச் சென்று திருப்பி கொடுக்கக் கூச்சமாய் இருந்ததாக அவர் தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். 

'ஓல் போல்' என்ற புத்தகத்தை அவர் 1957ஆம் ஆண்டில், இரவல் வாங்கினார். அப்போது அவருக்கு 10வயது. காலப்போக்கில் அந்தப் புத்தகத்தைப் பற்றி அவர் மறந்துவிட்டார். அது கண்ணில் பட்டபோது வீசவும் மனமில்லை என்று டயமண்ட் தெரிவித்தார். 

ஆனால், அவர் இறுதியாக தமது 74ஆம் வயதில், அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்ததாக தி நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. 

தாமதமாகப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்ததற்கான கட்டணத்தை அந்த நன்கொடை ஈடுகட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.   

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...