. இன்று திங்கட்கிழமை (07) காலை ராஜகிரிய தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, இதில் 35 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை ஒப்படைத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்ததோடு அவர்களுள் 6 போர் இன்று வேட்பு மனுக்களை ஒப்படைக்கவில்லை.
தற்போதைய பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் குமார வெல்கம மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் இவ்வாறு வேட்பு மனுக்களை ஒப்படைக்காதவர்களுள் அடங்குவர். இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்காக இரண்டு எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு அமைய இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல் இதுவாகும்.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் அதிகாரத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தி போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாசா புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள்! நாகநந்தவின ஆதரவு அனுரவுக்கு
T
The Leader Desk
அக்டோபர் 7, 2019 • 5:33 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இன்று திங்கட்கிழமை (07) காலை ராஜகிரிய தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, இதில் 35 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை ஒப்படைத்தனர்.
- நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்ததோடு அவர்களுள் 6 போர் இன்று வேட்பு மனுக்களை ஒப்படைக்கவில்லை.
- இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்காக இரண்டு எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

