Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய வடிவில் வடிவமைக்கத் திட்டம்!

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2026 • 3:11 AM

பொலிஸ் சீருடையைப் புதிய வடிவில் வடிவமைக்கத் திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கீழ், ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறைப் பொலிஸ் சேவை மற்றும் தொழில்முறைப் பொலிஸ் அதிகாரி ஒருவரை உருவாக்க முடிந்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
  • அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொலிஸ் சேவையின் தரமான வளர்ச்சிக்கு ஏற்ப பொலிஸ் சீருடையைப் புதிய பொலிவுடன் வடிவமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
  • ஆவது பொலிஸ் தடகள விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

கீழ், ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறைப் பொலிஸ் சேவை மற்றும் தொழில்முறைப் பொலிஸ் அதிகாரி ஒருவரை உருவாக்க முடிந்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

    85 ஆவது பொலிஸ் தடகள விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

    அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொலிஸ் சேவையின் தரமான வளர்ச்சிக்கு ஏற்ப பொலிஸ் சீருடையைப் புதிய பொலிவுடன் வடிவமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    அத்துடன், எதிர்வரும் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 5 ஆண்டுகளாக இழக்கப்பட்டிருந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சிரேஷ்டத்துவம், பணித்திறன் மற்றும் திறமைக்காண் தேர்வு முறைமைகளின் கீழ் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

    கீழ்நிலை அதிகாரி முதல் உயர்நிலை அதிகாரி வரை அனைவருக்கும் தராதரம் பாராது வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

    பொலிஸ் அதிகாரிகளின் கடமை அர்ப்பணிப்பிற்காக 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட அபாயக் கொடுப்பனவொன்றை (Risk allowance) வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால இங்கு தெரிவித்தார்.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

    பொலிஸ் சீருடையைப் புதிய வடிவில் வடிவமைக்கத் திட்டம்! | Tamil Leader | We Lead the Nation