-
பேச்ச வார்த்தைகள் முறியவில்லை: அடுத்தகட்ட நடவடிக்கைகள் இணையவழியில் (Online) தொடரும்.
-
தற்காலிகத் தீர்வுகளுக்கு அப்பாற்பட்டு: பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழு இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக ஊழியர் மட்ட உடன்பாட்டை (Staff-Level Agreement) எட்ட முடியாமையினால் இரு தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளதாகச் சிலர் மத்தியில் கருத்துக்கள் மேலெழுந்துள்ளன. எனினும், இந்த நிலைமை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், இது நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் சாதாரண தொழில்நுட்ப மறுஆய்வுச் செயல்பாட்டின் ஒரு இயல்பு மட்டுமே என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த பணிக்குழு, முக்கியமாக நாட்டின் பேரினப் பொருளாதாரம் மற்றும் நிதிச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதிலும், தரவுகளை ஒப்பிடுவதிலும், திட்டப் போக்கின் முன்னேற்றத்தைப் பரிசீலிப்பதிலுமே கவனம் செலுத்தியது. எனவே, விஜயத்தின் இறுதியில் நேரில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட முடியாமல் போனமை என்பது திட்டம் முறிவடைந்ததாகவோ அல்லது உறவுகள் சீர்குலைந்ததாகவோ வரைவிலக்கணம் செய்ய முடியாது என நிதி அமைச்சும் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுப்பு
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமையாகத் தொழில்நுட்ப மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார். IMF அதிகாரிகள் வோஷிங்டன் நோக்கிப் புறப்பட்டாலும், எஞ்சிய தொழில்நுட்ப விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் இணையவழி மற்றும் காணொளி (Virtual) தொழில்நுட்பத்தின் ஊடாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
அரசியல் அல்லது பொருளாதாரத் தலைப்புச் செய்திகளைத் தவறாக வரைவிலக்கணம் செய்வதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், இவ்வாறான செயல்பாடுகளின் துல்லியத்தன்மையை அடையாளம் காண்பது சந்தை ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது. சர்வதேச நாணய நிதியமும் இந்தப் பேச்சுவார்த்தைகள் பயனுள்ள பாதையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளமை, திட்டத்தின் அடிப்படைச் சட்டகத்திற்குள் குறிப்பிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு சிறந்த சான்றாகும்.
தற்காலிகத் தீர்வுகளுக்கு அப்பாற்பட்டு: பொருளாதாரம் புதிய பாதையில்
தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முக்கிய கவனம், நாட்டைத் தீவிர நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் (Stabilization) அப்பால் கொண்டு சென்று, நீண்டகாலக் கட்டமைப்பு சார்ந்த பொருளாதார மாற்றத்தை (Transformation) நோக்கியதாக அமைந்துள்ளது. அவசர வெளிநாட்டுக் கடன்களை நம்பியிருப்பதை அறிமுகமாகக் குறைத்து, அரசாங்கத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்காக இடைக்கால வருவாய் மூலோபாயமொன்றைத் (Medium-term revenue strategy) தயாரிப்பது இங்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவையாக உருவெடுத்துள்ளது.
இது தவிர, மின்சக்தி கொள்வனவு மற்றும் செலவை மீளப்பெறுதல் (Energy cost recovery) தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அரசாங்க மானிய முறைகளால் நிதிப் பற்றாக்குறை விரிவடையும் அபாயம் உள்ளதால், பொருளாதார ஸ்திரத்தப்பைப் பாதுகாத்து மின்சக்தித் துறையின் உண்மையான செலவுகளை விலை நிர்ணயத்திற்குள் படிப்படியாக உள்ளடாக்கும் பொறிமுறைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அரச கட்டமைப்புகளின் திறன், நிதித் துறையின் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்கள் போன்ற துறைகளும் எதிர்வரும் பொருளாதாரப் பயணத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளின் சவால்களுக்கு மத்தியில் இலங்கை தனது நிதி ஒழுக்கத்தையும் சீர்திருத்தச் செயல்பாடுகளையும் தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதே எதிர்வரும் 7 ஆவது மறுஆய்வின் மெய்யான பரிசோதனையாக அமையும்.


