-
வங்கிக் கணக்குகள் திறத்தல், வாகனப் பதிவு மற்றும் காணி உரிமமாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லுபடியாகும் TIN சான்றிதழை உள்நாட்டு திறைசேரி திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.
-
18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், வரும் மாத முதலாம் திகதி முதல் 8 பிரதான பொதுச் சேவைகளுக்குப் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் இதோ.
வங்கிக் கணக்கொன்றைப் புதிதாகத் தொடங்குவது உட்பட குறிப்பிட்ட 8 பணிகளுக்கு எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் TIN (Taxpayer Identification Number) சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமானது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறிப்பிடப்பட்டுள்ள 8 பணிகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது 2026 நவம்பர் 01 முதல் கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 102(3) பிரிவு மற்றும் 2023 ஆம் ஆண்டின் 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இலங்கையர்களும் வரி அடையாள எண்ணை (TIN) பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே இந்த புதிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் 08 பிரதான பணிகள்:
-
வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் புதிய கணக்கொன்றைத் திறத்தல்.
-
கட்டட வரைபடத்திற்கான (Building Plan) அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்.
-
மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் அதன் வருடாந்த சாரதி உரிமத்தைப் புதுப்பித்தல்.
-
காணி அல்லது கட்டடமொன்றைப் பதிவுசெய்தல் / உரிமமாற்றம் செய்தல்.
-
வியாபாரப் நிறுவனத்தைப் பதிவுசெய்தல்.
-
நிறுவனமொன்றின் (Company) பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
-
கடன் அட்டைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல்.
-
(மேற்குறிப்பிட்ட நிதி மற்றும் சொத்து சார்ந்த ஒப்பந்தங்கள்/சேவைகள்)
இந்தச் சேவைகளை வழங்குவதற்கு முன்னர், விண்ணப்பதாரர் செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளாரா என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வது மற்றும் உறுதிப்படுத்துவது எப்படி?
-
புதிதாகப் பதிவு செய்தல்: இதுவரை TIN எண் இல்லாதவர்கள் eservices.ird.gov.lk என்ற இணையத்தளத்தின் மின்-சேவை (e-Services) வாயிலாகப் பதிவுசெய்து கொள்ள முடியும்.
-
உறுதிப்படுத்துதல்: ஏற்கனவே TIN எண் வைத்திருப்பவர்கள் அதன் செல்லுபடியாகும் தன்மையை அவ்விணையத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேசிய அடையாள அட்டை எண் மற்றும் TIN எண் குறிப்பிடப்பட்டு அச்சிடப்பட்ட பிரதியும் அதிகாரப்பூர்வ சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


