Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன!

T

The Leader Desk

மார்ச் 22, 2021 • 11:23 AM

பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.
  • அந்த வகையில் ஐந்து அம்சங்களை கொண்ட ஒரு பிரேரணையை முன்வைத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஐந்து அம்ச பிரேரணைகள் பின்வருமாறு. 1.பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சமூகத்தில் சகல மட்டங்களிலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
  • எந்த விதமான நிர்ப்பந்தமும் இன்றி, பெண்கள் தாமாகவே அரசியலுக்கு முன்வரவேண்டும். 2.புதிய மற்றும் தகுதிவாய்ந்த பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்.
  • இதன் மூலம் 25வீத இட ஒதுக்கீட்டை நாம் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும். 3.இளம் பெண்கள் அரசியலுக்கு முன்வரவேண்டும்.இளம் வயதினர் அரசியலில் ஈடுபட்டால் அதிக ஆர்வத்துடனும் செயல்திறனுடனும் அவர்களால் செயற்பட முடியும் என்பதை நாம் உணர்கின்றோம்.
எழுத்து அளவு:

இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் முகமாக பெண் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை நாம் கட்சி பேதமற்ற முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

பெண்களாகிய நாம் அரசியலில் ஈடுபட்ட பின்னர் மக்கள் அபிவிருத்திக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பு, பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி பேசும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம். அந்த வகையில் ஐந்து அம்சங்களை கொண்ட ஒரு பிரேரணையை முன்வைத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

ஐந்து அம்ச பிரேரணைகள் பின்வருமாறு. 

1.பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சமூகத்தில் சகல மட்டங்களிலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும். எந்த விதமான நிர்ப்பந்தமும் இன்றி, பெண்கள் தாமாகவே அரசியலுக்கு முன்வரவேண்டும்.  

2.புதிய மற்றும் தகுதிவாய்ந்த பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்.

இதன் மூலம் 25வீத இட ஒதுக்கீட்டை நாம் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும். 
 

3.இளம் பெண்கள் அரசியலுக்கு முன்வரவேண்டும்.இளம் வயதினர் அரசியலில் ஈடுபட்டால் அதிக ஆர்வத்துடனும் செயல்திறனுடனும் அவர்களால் செயற்பட முடியும் என்பதை நாம் உணர்கின்றோம். எனவே இளம் பெண்கள் அதிகம் ஊக்கபடுத்தப்பட வேண்டும். 

4.ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்து சமூகத்திற்காக பணியாற்றக்கூடிய ஒரு பெண்ணை நீங்கள் அடையாளம் கண்டால் அவரை ஊக்கப்படுத்தி உங்களுடைய வாக்குகளில் முதன்மையான வாக்கை ஒரு பெண்ணுக்கு போடுவதன் மூலம் பெண்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதனையும் நாம் எமது கோரிக்கையாக முன்வைக்கின்றோம் 

5.உள்ளுராட்சி மன்றங்களைத் தாண்டி சட்டங்களை ஒழுங்கமைக்கும் இடம் பாராளுமன்றமாக இருப்பதனால் பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் இருப்பும் நிலைநிறுத்தப்படல் வேண்டும். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...