Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

அனோஜனை மீட்பதற்கான நடவடிக்கை: அரசியல்-மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் விசேட யோசனை சமர்ப்பிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2026 • 12:03 PM

அனோஜனை மீட்பதற்கான நடவடிக்கை: அரசியல்-மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் விசேட யோசனை சமர்ப்பிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இளைஞனைக் காப்பாற்ற சர்வதேச இராஜதந்திர ஆதரவைப் பெற ஆயத்தம்.
  • சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.
  • மன்னிப்புக் கோரும் முயற்சியின் போது சமூக ஊடகங்கள் மூலம் தூண்டுதல் கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனச் சுமந்திரனிடமிருந்து விசேட வேண்டுகோள்.
எழுத்து அளவு:
  • சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இளைஞனைக் காப்பாற்ற சர்வதேச இராஜதந்திர ஆதரவைப் பெற ஆயத்தம்.
  • மன்னிப்புக் கோரும் முயற்சியின் போது சமூக ஊடகங்கள் மூலம் தூண்டுதல் கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனச் சுமந்திரனிடமிருந்து விசேட வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 26 வயதான இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை மீட்பதற்கும், அவருக்கு மன்னரின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கமும் நாட்டின் அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் தற்போது பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மனிதநேய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் கல்முனை, நாவிதன்வெளி (நார்பிட்டிமுனை) பகுதியைச் சேர்ந்த அனோஜனுக்கு எதிராகச் சமூக ஊடகப் பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பத்தில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சவூதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, தூதரகம் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் தற்போது சவூதி அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியுடன் அவசரச் சந்திப்பிற்கு ITAK ஆயத்தம்

இதனிடையே, அனோஜனுக்கான மன்னிப்பையும் விடுதலையையும் உறுதிப்படுத்துவதற்காக நிலவும் இராஜதந்திர வழிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவுடன் அவசரச் சந்திப்பொன்றை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK) எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள அந்தப் கடிதத்தில், அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள தூதரக மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேலும் சில நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாகச் சவூதி அரேபியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நட்பு நாடுகளின் இராஜதந்திர உதவியைப் பெறுதல் மற்றும் புலம்பெயர் இலங்கைச் சமூகங்கள் ஊடாக சர்வதேச மனிதநேயத் தலையீடுகளை ஒருங்கிணைத்தல் தொடர்பான பல யோசனைகள் அதில் அடங்கியுள்ளன.

மேலும், வெளிவிவகார அமைச்சரினால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட சவூதி அரேபியா செல்லவுள்ள விசேட பிரதிநிதிகள் குழுவில் இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பெயரிடப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பும் சுமந்திரனின் கட்டுப்பாடான வேண்டுகோளும்

இந்த மனிதநேய நடவடிக்கையில் நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் முன்னின்று சவூதி அதிகாரிகளிடமும் சவூதி மன்னரிடமும் விடயங்களை முன்வைக்கத் தன்னார்வத்துடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இருப்பினும், இந்தச் செயல்முறை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், சில தரப்பினர் சமூக ஊடகங்கள் மூலம் தூண்டுதல் கருத்துக்களை வெளியிட்டு இந்தச் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயல்வதாக ஜனாபதிச் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் விசேட பதிவொன்றை மேற்கொண்டுள்ள அவர், அனோஜனுக்காக மன்னிப்புக் கோருவதைத் தவிர வேறு எந்தவொரு உணர்ச்சிப்பூர்வமான அல்லது இனரீதியான கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதைத் தவிர்ப்பது அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அத்தியாவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.

இராஜதந்திர மற்றும் உணர்வுபூர்வமான மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய இத்தகைய பிரச்சினையில், பகிரங்க அறிக்கைகள் மூலம் தேவையற்ற சிக்கல்களை உருவாக்காமல், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மனிதநேய அடிப்படையிலும் ஆன்மீகப் பிரார்த்தனைகளுடனும் செயற்படுவதன் முக்கியத்துவமே தலைவர்களின் பொதுவான நிலைப்பாடாக உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அனோஜனை மீட்பதற்கான நடவடிக்கை: அரசியல்-மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் விசேட யோசனை சமர்ப்பிப்பு! | Tamil Leader | We Lead the Nation