Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

எல் நினோ வெப்பத்தினால் 4.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர்களுக்கு ஆபத்து!

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2026 • 11:40 AM

எல் நினோ வெப்பத்தினால் 4.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர்களுக்கு ஆபத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீவிர வெப்பநிலை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளே அதிகளவில் பாதிக்கப்படவுள்ளன.
  • சிகாகோ பல்கலைக்கழகத்தின் 'க்ளைமேட் இம்பாக்ட் லேப்' (Climate Impact Lab) நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, சாதாரண ஆண்டுகளை விட தீவிர வெப்பநிலை நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44% வரை அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டுகிறது.
  • அறிக்கையின்படி, எதிர்வரும் ஆறு மாதங்களில் ஆப்பிரிக்காவின் சாஹெல் (Sahel) பிராந்தியத்தில் மட்டும் 66,800 மேலதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அதில் பாதியளவானவை ( 31,400 உயிரிழப்புகள் ) நைஜீரியாவில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதுதவிர, சூடானில் 17,500 , நைஜரில் 10,000 மற்றும் சாட்டில் 8,000 என ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் தீவிர ஆபத்து நிலவுகிறது.
எழுத்து அளவு:
  • தீவிர வெப்பநிலை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளே அதிகளவில் பாதிக்கப்படவுள்ளன.

  • விரைவான நிவாரணம் மற்றும் தழுவல் நடவடிக்கைகள் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திரங்கள் வெப்பமடைவதை தீவிரப்படுத்தித் தற்போது நிலவிவரும் வலுவான 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) காலநிலை நிலைமை காரணமாக, உலகம் முழுவதும் தீவிர வெப்பத்தினால் ஏற்படும் மேலதிக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 451,000 ஐத் தாண்டும் எனப் புதிய ஆராய்ச்சி அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் 'க்ளைமேட் இம்பாக்ட் லேப்' (Climate Impact Lab) நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, சாதாரண ஆண்டுகளை விட தீவிர வெப்பநிலை நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44% வரை அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கையின் விசேட அம்சம் யாதெனில், எதிர்வரும் மாதங்களில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகக்கூடிய பகுதிகளைக் துல்லியமாக அடையளப்படுத்தியுள்ளமையாகும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களும் அதிகாரிகளும் விரைவான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தீவிர வெப்பத்தின் பாரிய தாக்கம்: குளோபல் சவுத் (Global South) நாடுகள்

இந்தக் காலநிலை மாற்றத்தின் தீவிரமான தாக்கத்தினால் வளர்ந்து வரும் தெற்குலக நாடுகளே (Global South) அதிகளவில் பாதிக்கப்படவுள்ளன. அறிக்கையின்படி, எதிர்வரும் ஆறு மாதங்களில் ஆப்பிரிக்காவின் சாஹெல் (Sahel) பிராந்தியத்தில் மட்டும் 66,800 மேலதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அதில் பாதியளவானவை (31,400 உயிரிழப்புகள்) நைஜீரியாவில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, சூடானில் 17,500, நைஜரில் 10,000 மற்றும் சாட்டில் 8,000 என ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் தீவிர ஆபத்து நிலவுகிறது. ஆசியப் பிராந்தியமும் இதற்கு விதிவிலக்கல்ல; பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் கூட்டாக 19,400 மேலதிக உயிரிழப்புகளும், இந்தோனேசியாவில் 19,300 உயிரிழப்புகளும் பதிவாகக்கூடும். இந்தியாவில் 15,800 உயிரிழப்புகள் எதிர்பார்க்கப்படுவதுடன், தென்னமெரிக்காவின் பிரேசிலிலும் தீவிர வெப்பம் காரணமாக 13,300 உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எல் நினோ நிலைமையானது வெறும் வெப்பநிலை அதிகரிப்போடு மட்டும் நின்றுவிடாமல், வறட்சி, காட்டுத்தீ மற்றும் திடீர் வெள்ளப் பெருக்குகளையும் தீவிரப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்காலக் கொடூர யதார்த்தத்தின் அறிகுறி

இம்முறை எல் நினோ நிகழ்வை விஞ்ஞானிகள் "நமது எதிர்காலத்திலிருந்து கிடைத்த அஞ்சலட்டை" (Postcard from our future) என வர்ணித்துள்ளனர். அதாவது, இன்னும் 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் உலகம் சந்திக்கவிருக்கும் சாதாரண வெப்பநிலை நிலைமைகளை, இன்றே இதன் மூலம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. பொருத்தமான தழுவல் நடவடிக்கைகளில் உடனடியாக முதலீடு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் கொடூரமான நிலைமையின் முன்கூட்டிய எச்சரிக்கையாக இதனைப் பார்க்கலாம்.

இருப்பினும், விரைவான அவசரப் பதிலளிப்புகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தயாரிப்புகள் மூலம் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய பல உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என அறிக்கை வலியுறுத்துகிறது. முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், குளிரூட்டும் மையங்கள் மற்றும் திறந்தவெளிப் பணியாளர்களின் பாதுகாப்பு போன்ற நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பெருமளவிலான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என 'க்ளைமேட் இம்பாக்ட் லேப்' அமைப்பின் இணை நிறுவனர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் (Michael Greenstone) தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை மேலும் வளர்ச்சியடையும் விதம் குறித்து, ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கணிப்புகளையும் தரவுகளையும் புதுப்பித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...