Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சாமர சம்பத்திற்கு 4 வழக்குகளில் பிணை: பொஸ்பேட் வழக்கில் மீளவும் விளக்கமறியல்!

T

The Leader Desk

அக்டோபர் 23, 2026 • 2:51 PM

சாமர சம்பத்திற்கு 4 வழக்குகளில் பிணை: பொஸ்பேட் வழக்கில் மீளவும் விளக்கமறியல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • லஞ்சம் பெற்றமை தொடர்பான நான்கு வழக்குகளுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், பொஸ்பேட் கொடுக்கல் வாங்கல் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டினடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 06 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதமான இரு ஆட்பிணைகள் விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டு வெளிநாட்டுக்கடவுச்சீட்டுகளை நீதிமன்றப் பொறுப்பில் எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
  • குறித்த நான்கு வழக்குகளும் எதிர்வரும் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி மீள அழைக்கப்படும்.
  • சுபாஷ் ஜெம்ஸ்: அதிபதி சுபாஷ் கருணாரத்னவிடம் 10 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டமை.
எழுத்து அளவு:

லஞ்சம் பெற்றமை தொடர்பான நான்கு வழக்குகளுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், பொஸ்பேட் கொடுக்கல் வாங்கல் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டினடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 06 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிய வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய அளவிலான லஞ்சச் சம்பவங்கள் சில தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் தனிப்பட்ட செயலாளர் லியனாரச்சி கே சுமதிபால லியனாரச்சி ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (23) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் பரிசீலித்த கொழும்பு முதன்மை நீதவான் அஸங்க எஸ். போதரமை, சந்தேகநபர்களுக்கு ஒரு சம்பவத்திற்குத் தொடர்பில் கடுமையான நிபந்தனைகளுடனான பிணையை வழங்கி, மற்றைய குற்றச்சாட்டினடிப்படையில் மேலும் விளக்கமறியலில் வைப்பதற்குத் தீர்ப்பளித்தார்.

மாணிக்கக்கல் வியாபாரிகளின் 4 வழக்குகளுக்குக் கடுமையான பிணை

மாணிக்கக்கல் வியாபாரிகளுக்குத் தடங்கலின்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சப் பணம் பெற்றமை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 4 வழக்குகளுக்குச் சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதமான இரு ஆட்பிணைகள் விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டு வெளிநாட்டுக்கடவுச்சீட்டுகளை நீதிமன்றப் பொறுப்பில் எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டது. குறித்த நான்கு வழக்குகளும் எதிர்வரும் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி மீள அழைக்கப்படும்.

நீதிமன்றத்தின் முன் வெளிப்பட்ட லஞ்சக் குற்றச்சாட்டுகள்

மாணிக்கக்கல் வியாபாரிகள் மூவரை இலக்குவைத்து நிதி கோரப்பட்ட விதம் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தியது:

  • புன்சிரி ஜெம்ஸ்: அதிபதி புன்சிரி தென்னகோனிடம் 12 இலட்சம் ரூபாயைக் கோரி அதில் 5 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டமை.

  • சுபாஷ் ஜெம்ஸ்: அதிபதி சுபாஷ் கருணாரத்னவிடம் 10 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டமை.

  • பிரியந்த ஜெம்ஸ்: அதிபதி பிரியந்த சரத் சில்வாவிடம் 2 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டமை.

விளக்கமறியல் உத்தரவை நீடித்த பொஸ்பேட் கொடுக்கல் வாங்கல்

மாணிக்கக்கல் வழக்குகளிலிருந்து பிணை கிடைத்தபோதிலும், பொஸ்பேட் ஏற்றுமதி/இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கொடுக்கல் வாங்கலில் சந்தேகநபர்களுக்கு விடுதலை மறுக்கப்பட்டது. 2022 செப்டம்பர் 08 முதல் 2024 செப்டம்பர் 23 வரையிலான காலப்பகுதிக்குள் மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க இங்கு 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

தொடர்புடைய சம்பவம் குறித்தான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த வாதங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கையை நிராகரித்து இருவரையும் எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...