Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'முஸ்லிம் தாதி உதவியாளர்களின் ஆடை உரிமை குறித்த கட்டளையை உடன் அமுல்படுத்துங்கள்'

T

The Leader Desk

அக்டோபர் 22, 2026 • 4:31 AM

'முஸ்லிம் தாதி உதவியாளர்களின் ஆடை உரிமை குறித்த கட்டளையை உடன் அமுல்படுத்துங்கள்'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம் பெண்களுக்குத்தேவையான உரிமையை நிலைநாட்டும் வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஆறு பேர் இணைந்து சுகாதார அமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று (20) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இத்தகவலை வெளியிட்டார்.
  • எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

முஸ்லிம் பெண்களுக்குத்தேவையான உரிமையை நிலைநாட்டும் வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்ப் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஆறு பேர் இணைந்து சுகாதார அமைச்சருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று (20) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இத்தகவலை வெளியிட்டார்.

எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது:

"நான் விரிவாகப்பேசுவதற்கு முன்பு, இங்கு முதல் வரிசையில் இருக்கின்ற அமைச்சர்களூடாக, சுகாதார அமைச்சரிடமும், பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி அவர்களிடமும் தாதி உதவியாளர்களின் ஆடை விடயமாக இவ்வேண்டுகோளை விடுக்கின்றேன்."

"விசேடமாக நாம் இப்பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பேசும் கட்சிகளின் தலைவர்கள், ஆறு பேர் சேர்ந்து ஒரு கடிதத்தை அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம்.

அச்சீருடை விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தீர்மானத்தை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

"அதன்படி, உரிய குழுவை நியமித்து, நிலைபேறான அவசியமான மாற்றங்களை ஏற்படுத்தித் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் எம்பி தனதுரையின் போது கேட்டுக் கொண்டார்.

-விருட்ச வேந்தன்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...