Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் நினைவுகூரல்!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2026 • 4:26 AM

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் நினைவுகூரல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படுகொலை செய்யப்பட்ட நிராயுதபாணியான பொதுமக்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கண்ணீருடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
  • சமாதானத்தின் பெயரால் இடம்பெற்ற வைத்தியசாலைப் படுகொலை சமாதானத்தைப் பேணுவதற்காக அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்து வடக்கில் முகமிட்டிருந்த இந்தியப் படையினர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியான படுகொலைகளைப் புரிந்திருந்தனர்.
  • பரிமளம் ஆகிய மூன்று மருத்துவர்களும், ஆர்.
எழுத்து அளவு:

கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனையின் (JVP) ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு உள்ளான இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரவழைக்கப்பட்ட இந்திய அமைதிப் படையினரால் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

இந்திய அமைதிப் படையினரின் (IPKF) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் 2026 அக்டோபர் 21 ஆம் திகதி புதன்கிழமை வைத்தியசாலையில் நடைபெற்றடதுடன், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர்களாலும் சுடரேற்றியும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட நிராயுதபாணியான பொதுமக்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கண்ணீருடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சமாதானத்தின் பெயரால் இடம்பெற்ற வைத்தியசாலைப் படுகொலை

சமாதானத்தைப் பேணுவதற்காக அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்து வடக்கில் முகமிட்டிருந்த இந்தியப் படையினர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியான படுகொலைகளைப் புரிந்திருந்தனர்.

1987 அக்டோபர் 21 ஆம் திகதி லெப்டினன்ட் ஜெனரல் தீபேந்தர் சிங்கின் தலைமையிலான இந்திய அமைதிப் படைப் பிரிவினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வைத்தியசாலை ஊழியர்கள் 21 பேர் மற்றும் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளர்கள் 47 பேர் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஏ. சிவபாதசுந்தரம், எம்.ஜே. கணேசரத்தினம் மற்றும் கே. பரிமளம் ஆகிய மூன்று மருத்துவர்களும், ஆர். இராமநாதன், சிவபாக்கியம் மற்றும் லீலாவதி ஆகிய மூன்று செவிலியர்களும், தொலைபேசி இயக்குநரான கனகலிங்கம், பணி மேற்பார்வையாளர்களான ஆர். கிருஷ்ணராஜ், கே. செல்வராஜ் மற்றும் வீ. சண்முகலிங்கம் எனும் அவசர ஊர்தி (Ambulance) ஓட்டுநரும் அடங்குவர்.

பாக் ஜலசந்தியின் இரு மருங்கிலும் மறுக்கப்பட்ட நீதி

வைத்தியசாலைத் தாக்குதல் உள்ளிட்ட இந்தியப் படையினரின் படுகொலைகள் தொடர்பாக எவ்வித விசாரணைகளோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதோ கடந்துசென்ற முப்பத்தெட்டு ஆண்டுகளில் பாக் ஜலசந்தியின் இரு மருங்கிலுமுள்ள எந்தவொரு அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்தியப் படையினரால் 1989 ஆகஸ்ட் மாதத்தில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அறுபதிற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு ஓராண்டிற்கு முன்னர் அரசாங்கத்திடம் 5 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி விரிவான ஆவணமொன்றை இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் (ORR) சமர்ப்பித்திருந்தது.

இது தொடர்பாகத் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையும் இதுவரை தெரியவரவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...