நிலவும் கொந்தளிப்புத் தன்மையானது, அடுத்த 24 மணித்தியாலக் காலப்பகுதிக்குள் குறை அழுத்தப் பகுதியாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது.
இக் கட்டமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் மழை நிலைமையில் அதிகரிப்பு இன்று (21) முதல் எதிர்வரும் சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அனுராதபுர மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


