Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனைக் காப்பாற்ற முஸ்லிம்கள் முயற்சி!

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2026 • 3:48 AM

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனைக் காப்பாற்ற முஸ்லிம்கள் முயற்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ‘நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக’த் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.
  • அந்தப் பதிவு இடப்பட்டு 10 நிமிடங்களுக்குள் அதனை நீக்கிவிட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
  • "இவ்வாறானதொரு செயலுக்காக மனித உயிரைப் பறிப்பது முற்றிலும் விகிதாசாரமற்றது, மனிதத்தன்மையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
  • சமூக ஊடகங்களில் வெளியிட்ட அவதூறான பதிவொன்றிற்காக 5 வருட சிறைத்தண்டனை விதிப்பதே அளவுக்கு அதிகமான தண்டனை என்றும், இவ்வாறானதொரு செயலுக்காக ஒருவரின் உயிரைப் பறிப்பது முற்றிலும் மனிதநேயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அவர்கள் குறித்து அவமதிக்கும் வகையிலான பதிவொன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டமையால், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த தமிழ் இளைஞருக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் பெரும் திரளாக குரல் கொடுத்துள்ளனர்.

      சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செப்டம்பர் 16 ஆம் திகதி, இலங்கை வெளிவிவகார அமைச்சினால் அவரது தந்தைக்கு அரபு மொழியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் பிரதியும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே தவிர, குடும்பத்தினர் வாசிக்கக்கூடிய தமிழ் மொழிபெயர்ப்பு அனுப்பப்படவில்லை.

      அதன்மூலம் வெளிப்பட்டுள்ள தகவல்களின்படி, அனோஜனால் பதிவிடப்பட்ட நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான முகநூல் பதிவு தொடர்பாக ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 5 வருட சிறைத்தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் அந்நாட்டின் சைபர் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையாகும்.

      அம்பாறை, கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த தம்பிராசா சிவராசா (தந்தை) மற்றும் யோகலெட்சுமி சிவராசா (தாய்) ஆகியோர் கண்ணீர் மல்க ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளதுடன், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமது மகனை விடுவிப்பதற்காக இருநாட்டு அதிகாரிகளும் கருணையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

      சிவராசா அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 30 லட்சம் ரியால் அபராதமும் அல் அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் ஜூலை 15 ஆம் திகதி விதிக்கப்பட்டிருந்ததுடன், மேல்முறையீட்டிற்குப் பின்னர் தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அனோஜன் தொலைபேசியில் தெரிவித்ததாகத் தாய் யோகலெட்சுமி கூறுகிறார்.

      அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ‘நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக’த் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.

      சட்டத்தின் நோக்கமும் விகிதாசாரமற்ற தண்டனையும்

      சிவராசா குடும்பத்தினர் சிறுகச் சிறுகச் சேர்த்த 18 லட்சம் ரூபாயைச் செலவிட்டு இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் ஹிஸ்ன் அல்-அன்சிமா தனிநபர் நிறுவனத்தின் சட்டத்தரணி அத்லான் அப்துல்லா அல்-சுபே தாக்கல் செய்த இரண்டு பக்க மேல்முறையீட்டில், குறித்த இரண்டு அதிகபட்ச தண்டனைகளும் ஒன்றாக விதிக்கப்பட்டது செய்யப்பட்ட குற்றத்திற்கு விகிதாசாரமானதா என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

      செய்யப்பட்ட செயலின் தீவிரத்தையோ அல்லது அதன் குற்ற உணர்வையோ மறுக்காத தனது கிளையன்ட், மார்க்கத்தின் புனிதத்தைக் குறைக்கக் கோரவோ அல்லது செய்த குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடவோ இல்லை எனச் சுட்டிக்காட்டும் சட்டத்தரணி, ஷரீஆ சட்டத்தில் 'தாஸீர்' (Ta'zir) என அழைக்கப்படும் கோட்பாட்டின்படி, தண்டனையானது தடுப்பதையும் மறுவாழ்வையும் நோக்கமாகக் கொண்டே வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். அவ்வாறு செய்யாமல், தண்டனையின் முடிவில் சட்டத்தின் நோக்கத்திலிருந்தே விலகிச் செல்லும் நிலைக்குப் போவது பொருத்தமற்றது என்றும் வாதாடியுள்ளார்.

      முகநூல் பதிவு ஒரு வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட கோபத்திலேயே பதிவிடப்பட்டதாக அனோஜன் தெரிவித்ததாக ஆரம்ப வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவு இடப்பட்டு 10 நிமிடங்களுக்குள் அதனை நீக்கிவிட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

      "பதிவை விரைவாக நீக்கியமையானது, எனது கிளையன்ட் அதனைத் தொடர்ந்து வைத்திருக்கவோ அல்லது மீண்டும் பதிவிடவோ இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், அது அதிகமாகப் பகிரப்படும் வகையில் அவர் அதனை நீண்ட நேரம் வைத்திருக்கவில்லை" என சட்டத்தரணி அல்-சுபே வாதாடியுள்ளார்.

      குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரேயொரு பதிவை மட்டுமே அனோஜன் செய்துள்ளார் என்றும், அதற்கு முன்னர் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும், அவரது கணக்கு இதற்காக மட்டுமே பராமரிக்கப்பட்டு வரவில்லை என்றும் மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      முன்னைய குற்றப்பின்னணி இல்லாத தனது கிளையன்ட்டைக் கருத்திற்கொண்டு 5 வருட சிறைத்தண்டனையைக் குறைக்குமாறும், தண்டிக்கப்பட்ட இளைஞனின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு அபராதத்தைச் கணிசமான அளவில் குறைக்குமாறும் சட்டத்தரணி அத்லான் அப்துல்லா அல்-சுபே தனது நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டில் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

      "மனித உயிரைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு

      இன்றும் மரண தண்டனை ஒழிக்கப்படாத இலங்கையின் முன்னாள் நீதி அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். யு. எம். அலி சப்ரி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாவது; செய்திகளில் வெளியாகியுள்ள மரண தண்டனை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சிடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வமான தீர்ப்பை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

      "இவ்வாறானதொரு செயலுக்காக மனித உயிரைப் பறிப்பது முற்றிலும் விகிதாசாரமற்றது, மனிதத்தன்மையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

      சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட் பதியுதீன், அனோஜனின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார்.

      சவூதி அரேபியாவில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து இலங்கையின் முஸ்லிம் சமூகமும் கவலையடைந்துள்ளதாக அந்த முஸ்லிம் தலைவர் அனோஜனின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

      சமூக ஊடகங்களில் வெளியிட்ட அவதூறான பதிவொன்றிற்காக 5 வருட சிறைத்தண்டனை விதிப்பதே அளவுக்கு அதிகமான தண்டனை என்றும், இவ்வாறானதொரு செயலுக்காக ஒருவரின் உயிரைப் பறிப்பது முற்றிலும் மனிதநேயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

      அனோஜன் தனது முகநூலில் வெளியிட்ட பதிவிற்காக மரண தண்டனை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஊடகங்கள் வாயிலாகப் பதிவிட்ட பல முஸ்லிம் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

      இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும், அனோஜனை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்தப் பதிவுகளில் வலியுறுத்தியுள்ளனர்.

      சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் தண்டனையை ரத்து செய்யவும், அவருக்குச் சட்ட மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டே அவர் கோரிக்கையை விடுத்துள்ளார்.

      அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் மிகயுயர்ந்த இராஜதந்திர மட்டத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் வலியுறுத்தியுள்ளார். அனோஜனின் மேல்முறையீட்டு நடைமுறைகளை வெளிவிவகார அமைச்சு கையாண்ட விதம் குறித்து அரசாங்கத்திடம் பதில்களைக் கோரும் நோக்கில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

      தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

      எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

      சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

      Tamil Leader • எங்களைப் பற்றி

      Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

      மேலும் வாசிக்க (Read More)→

      கலந்துரையாடல் (0)

      உரையாடலில் இணையுங்கள்

      கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

      கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...