Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'பண்டா ஆட்சியின் போது மாப்பிட்டிகம தேரர் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் படிப்பினை' – ரிஷாட்!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2021 • 7:26 AM

'பண்டா ஆட்சியின் போது மாப்பிட்டிகம தேரர் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் படிப்பினை' –  ரிஷாட்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
  • அது எப்படியான முடிவொன்றுக்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் அறிவோம்" என ரிஷாட் எம்.
  • https://twitter.com/rbathiudeen/status/1382556449046360065?s=08.
எழுத்து அளவு:

அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் S.W.R.D.பண்டார நாயக்க ஆகிய இருவரும் தேசிய வாதத்தின் வாக்குறுதியின் பெயரில் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று இருக்க வேண்டுமென்று திலும் அமுனுகம கூறியுள்ளார்."

மாப்பிட்டிகம புத்த ரக்கிட்ட தேரருக்கும் பண்டார நாயக்கவிடமிருந்து இது போன்ற எதிர்பார்ப்பே இருந்தது. அது எப்படியான முடிவொன்றுக்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் அறிவோம்" என ரிஷாட் எம். பி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஹிட்லர் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, இங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலளிக்கையில், "அடால்ஃப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல" என தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதுமாத்திரமின்றி, இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட முக்கியமானவர்களில் ஒருவரான முருத்தட்டுவே ஆனந்த தேரர், இது தொடர்பில் கூறுகையில், ஹிட்லர் பாணியிலான ஆட்சியை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென யாராவது சொன்னால், அதற்கு மக்கள் விரைவில் பதிலளிப்பார்கள்" என்று, தெரிவித்துள்ளதாகவும், ரிஷாட் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/rbathiudeen/status/1382556449046360065?s=08

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...