Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களை இரத்து செய்தது ஏன்?

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2021 • 11:47 AM

முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களை இரத்து செய்தது ஏன்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
  • இவ்வாறான நன்கொடை நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களையும் கம்பனிகள் சட்டத்தின் கீழ் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யுமாறு வக்பு சபை கடந்த 2019 ஆண்டு எழுத்து மூலம் அந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
  • அதன் பிரகாரம் 2020 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவு இலக்கத்தை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
எழுத்து அளவு:

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். சில நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முஸ்லிம் சமய  மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனங்களின் பதிவுகள் இரத்துச்செய்யப்பட்டிருப்பது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பல தன்னார்வ நலனோம்புகை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக தொடர்பாக பாதுகாப்பு பிரிவினால் திணைக்களத்திடம் விசாரித்தபோது, அதுதொடர்பான தகவல்கள் திணைக்களத்திடம் இருக்கவில்லை. இது கேள்விக்குறியான விடயமாகும். இந்த நிறுவனங்களின் கணக்கு விபரங்கள் திணைக்களத்துக்கு வழங்கப்படாத நிலையில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு திணைக்களத்துக்கு எந்தவித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. அதனால் இதுதொடர்பாக புதிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவ்வாறான நன்கொடை நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களையும் கம்பனிகள் சட்டத்தின் கீழ் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யுமாறு வக்பு சபை கடந்த 2019 ஆண்டு எழுத்து மூலம் அந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. இதன்போது சில தொண்டு நிறுவனங்கள் செயற்படுவதில்லை என்பது தெரியவந்தது. அதன் பிரகாரம் அந்த நிறுவனங்களின் பதிவு இரத்துச்செய்யப்பட்டிருக்கின்றது.

அத்துடன் வக்பு சபை சட்டத்துக்கமைய பதிவு செய்யப்பட்டிருந்த ஏனைய நிறுவனங்களுக்கு ஒரு வருடகாலம் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் 2020 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவு இலக்கத்தை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் சில நிறுவனங்கள் வக்பு சபை சட்டத்தின் கீழ் பதிவு செய்யபட்டுள்ளன.ஏனைய நிறுவனங்கள் கம்பனிகள் சட்டம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...