Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2021 • 12:55 PM

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நபருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளர் கு.சுலோஜனாவிடம் மகஜரொன்றினையும் கையளித்துள்ளனர்.
  • இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

நபருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வன்முறையாளர்களால் அரச ஊழியர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும், அரச உத்தியோகத்தர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு கடும் சட்டத்தினை அமுல்படுத்து போன்ற விடயங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளர் கு.சுலோஜனாவிடம் மகஜரொன்றினையும் கையளித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...