Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

நாளை எகிப்தில் மம்மிகளின் ஊர்வலம்!

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2021 • 12:15 PM

நாளை எகிப்தில் மம்மிகளின் ஊர்வலம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பண்டைய எகிப்து பாணியில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் 18 அரசர்கள் மற்றும் நான்கு அரசிகளின் மம்மிகள் மூப்பு அடிப்படையில் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
  • கடந்த பல தசாப்த காலமாக மத்திய கெய்ரோவில் உள்ள எகிப்து அருங்காட்சியகத்தில் இருந்த இந்த மம்மிகள் தலைநகரின் தெற்கில் 2017 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட எகிப்து தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படவுள்ளன.
  • தெற்கு எகிப்தில் கிறிஸ்துவுக்கு சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி புரிந்த இரண்டாவது செகெனென்ரே தாவோவின் மம்மி இந்த ஊர்வலத்தில் முதலாவது தேரில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
  • அதற்கு பின் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நான்காவது ரம்சீசின் மம்மி எடுத்துச் செல்லப்படும்.
எழுத்து அளவு:

பண்டைய எகிப்து பாணியில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் 18 அரசர்கள் மற்றும் நான்கு அரசிகளின் மம்மிகள் மூப்பு அடிப்படையில் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

கடந்த பல தசாப்த காலமாக மத்திய கெய்ரோவில் உள்ள எகிப்து அருங்காட்சியகத்தில் இருந்த இந்த மம்மிகள் தலைநகரின் தெற்கில் 2017 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட எகிப்து தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படவுள்ளன.

இங்கு இந்த மம்மிகள் தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்தக்கூடிய நவீன பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

தெற்கு எகிப்தில் கிறிஸ்துவுக்கு சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி புரிந்த இரண்டாவது செகெனென்ரே தாவோவின் மம்மி இந்த ஊர்வலத்தில் முதலாவது தேரில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. அதற்கு பின் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நான்காவது ரம்சீசின் மம்மி எடுத்துச் செல்லப்படும்.

பண்டைய எகிப்தின் பலம்மிக்க பெண் பாரோவான ஹட்செப்சுட் அரசி மற்றும் இரண்டாவது ரம்சிஸ் மம்மிகளும் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றுள்ளன.

நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஊர்வலத்தில் எகிப்து கலைஞர்களின் இசை மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இவை அனைத்து அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

1881 தொடக்கம் பெரும்பாலும் லக்சோருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 22 மம்மிகளும் 1900களின் ஆரம்பம் தொடக்கம் எகிப்து அருங்காட்சியகத்திலேயே வைக்கப்பட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...