Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

புகைத்தல் மீதான கவர்ச்சி சமூகத்திலிருந்து நீங்கட்டும்!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2021 • 10:57 AM

புகைத்தல் மீதான கவர்ச்சி சமூகத்திலிருந்து நீங்கட்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதாவது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் சிகரட்டை இன்னமும் புகைப்போர் முட்டாள்கள் எனும் கருத்தின் வெளிப்பாடே இச்செயற்றிட்டம்.
  • அதாவது புகைத்தலினால் வருடாந்தம் 07மில்லியன் பேர் உலகளாவிய ரீதியில் அகால மரணத்தைத் தழுவுகின்றனர்.
  • இலங்கையில் தினமும் 60 பேர் மரணிப்பதற்கு புகைத்தல் காரணமாக அமைகின்றது, தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மை காரணியாக புகைப்பழக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • சிகரட் புகைக்கும் 04 பேரில் ஒருவருக்கு பாலியல் பலவீனம் ஏற்படுகின்றது.
எழுத்து அளவு:

அதாவது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் சிகரட்டை இன்னமும் புகைப்போர் முட்டாள்கள் எனும் கருத்தின் வெளிப்பாடே இச்செயற்றிட்டம். புகைத்தலின் மீதுள்ள கவர்ச்சியைக் குறைப்பதற்காகவும், எதிர்கால சந்ததியினர் புகைப்பழக்கத்திற்கு ஆளாகமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஏப்ரல் முதலாம் திகதியன்று 'இன்னமும் சிகரட் புகைப்போரின் தினம்' எனும் காலத்திற்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே இச்செயற்றிட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது புகைத்தலினால் வருடாந்தம் 07மில்லியன் பேர் உலகளாவிய ரீதியில் அகால மரணத்தைத் தழுவுகின்றனர். இலங்கையில் தினமும் 60 பேர் மரணிப்பதற்கு புகைத்தல் காரணமாக அமைகின்றது, தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மை காரணியாக புகைப்பழக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிகரட் புகைக்கும் 04 பேரில் ஒருவருக்கு பாலியல் பலவீனம் ஏற்படுகின்றது.

சிகரட் புகைப்போர் தனது இளமைப் பருவத்திலேயே முதிர்ந்த தோற்றத்தை அடைந்து தனது வசீகரமான தோற்றத்தை இழக்கின்றார். முகம் அவலட்சணமடைந்து, உதடு கருமையடைந்து, வெளிறி, வாயில் துர்நாற்றம் வீசும் ஒரு விகாரமடைந்தவராக மாற்றமடைகின்றார். இது மட்டுமின்றி எதற்கும் சிகரட் தேவை என்கின்ற நிலைமையை அடைந்து தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட சிகரட் இல்லாமல் முடியாது தடுமாறுகின்றனர்.

சிகரட்டுக்கு அடிமையாகி சுதந்திரமற்ற, மட்டுப்பட்ட வாழ்க்கையை தழுவுகின்றனர். இந்தளவு பாதிப்புக்கள் இருந்தும் பெருமளவிலான பணத்தை சிகரட்டிற்காக செலவழித்து தனக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திக் கொள்வோர்களின் நி​லைமையை எடுத்துக் காட்டவும், எதிர்கால சந்ததியினர் சிகரட் புகைப்பது முட்டாள்களின் செயல் என கருத வேண்டும் என்பதற்காகவும் எதிர்கால தலைமுறையினர் புகைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...