Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

மன்னார் டிப்போவுக்கு மாவட்டச் செயலாளர் திடீர் விஜயம்!

T

The Leader Desk

மார்ச் 31, 2021 • 8:48 AM

மன்னார் டிப்போவுக்கு மாவட்டச் செயலாளர் திடீர் விஜயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது, பஸ் பற்றாக்குறை காரணமாகவே, குறித்த பஸ் சேவையில் ஈடுபட்டாகவும், எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது எனவும், மன்னார் சாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன், மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மாவட்டச் செயலாளரிடம் மன்னிப்பும் கோரினர்.
  • மேலும், மன்னார் சாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
  • இவற்றை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து, நேற்று (30) அதிகாலை 4.30 மணியளவில், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை   போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததோடு, ஜெயபுரம் பகுதியில் வைத்து பஸ்ஸின் சக்கரத்துக்குகு காற்று போய் இடை நடுவில் நின்றுள்ளது.

இவ்விடயம்,  ஊடகங்களில் வெளியாகிய நிலையிலும், மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், குறித்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக,  இலங்கை  போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், இன்று (31) காலை 9.30 மணியளவில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, பஸ் பற்றாக்குறை காரணமாகவே, குறித்த பஸ் சேவையில் ஈடுபட்டாகவும், எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது எனவும், மன்னார் சாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன்,  மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக  மாவட்டச் செயலாளரிடம் மன்னிப்பும் கோரினர்.

மேலும்,  மன்னார் சாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக   மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இவற்றை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...