Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

இஸ்லாம் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல!

T

The Leader Desk

மார்ச் 30, 2021 • 12:24 PM

இஸ்லாம் மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியிலுள்ள ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளுக்காக இஸ்லாத்தின் மீதோ அல்லது பௌத்த மதத்தின் மீதோ குற்றம் கூறுவது நியாயம் அல்ல என்றும் அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
  • அதாவது, “அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கடவுள்” என்று சூபிகள் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இவ்வாறு தவறான முறையில் குறிப்பிடப்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் இருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் எமக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கு அது ஒரு சாதகமான காரணியாக அமைந்து விட முடியும்.
எழுத்து அளவு:

(வஹாபிஸம்) கொள்கை ஆகும். அதேபோன்று ஆரம்ப நிலையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத ‘பௌத்த’ தீவிரவாதமும் நாட்டில் ‘இஸ்லாமிய’ தீவிரவாதம் மேலும் தீவிரமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளமையானது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அவதானிப்பு அல்ல' என்று முஸ்லிம் சமூகத்தின் மூத்த பிரமுகர்கள் நால்வர் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியிலுள்ள ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளுக்காக இஸ்லாத்தின் மீதோ அல்லது பௌத்த மதத்தின் மீதோ குற்றம் கூறுவது நியாயம் அல்ல என்றும் அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; இவ்வாறு தவறான முறையில் குறிப்பிடப்படுவதன் மூலம் சர்வதேச ரீதியில் இருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் எமக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கு அது ஒரு சாதகமான காரணியாக அமைந்து விட முடியும்.

நாட்டில் நிலவும் தீவிரவாதத்தில் பிரதான பங்கு வகிப்பது ‘தவ்ஹீத் கொள்கை’ எனும் கூற்றை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு பிரிவுகளும் சடங்குகளும் இருப்பது உண்மை. அத்தோடு ஷாபிஈ, ஹனபி, மாலிகி, ஹன்பலி மற்றும் தப்லீஹ், தவ்ஹீத், சூபி, முவஹ்ஹிடீன்(வஹாபி) என்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

எனினும், அவை இஸ்லாமிய அடிப்படை கற்பித்தல்களுக்கு அஹ்மதிய்யா போன்று முரணானவை அல்ல. மேலும், இந்த பன்முகத்தன்மையை சகல முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், வித்தியாசங்கள் எமக்குரிய அழகு என்றும், அந்த வித்தியாசங்களை கௌரவத்துடன் அணுகுவதும், அவை முஸ்லிம்களுக்கிடையில் பாரிய பிரிவுகளுக்கு, ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர, காரணமாக அமையவில்லை என்பதும் சகல முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்ட விடயங்களாகும்.

குறித்த விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான பரிந்துரைகள் செய்யப்பட்டால் அது மக்களுக்கு மத்தியில் வெறுப்பு மற்றும் பேதங்களை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எம்மிடமுள்ளது.

இதேவேளை முஸ்லிம்களாகிய எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் மற்றுமொரு விடயத்தை ஆணைக்குழுவின் அறிக்கையில் காணக் கூடியதாக உள்ளது. அதாவது, “அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கடவுள்” என்று சூபிகள் நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சூபிகள் தவறாகக் காட்டப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

சூபிகளும் ஏக இறைவன் ஒருவனை மாத்திரமே வணங்குகின்றனர் என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். தவ்ஹீத் மற்றும் சூபி உள்ளிட்ட சகல இஸ்லாமிய பிரிவுகளிலும் உள்ளவர்கள் உறுதியான ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களாவர்.

அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். இவர்கள் இறைவசனங்களான அல் குர்ஆனையும் நபியவர்களின் ஸுன்னாக்களையுமே பின்பற்றுகின்றனர். காலத்துக்கு காலம் வரும் உலமாக்கள், அறிஞர்கள் மற்றும் ஞானிகளின் அறிவுரைகளில் குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸுகளுக்கும் முரணில்லாத விடயங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவார்கள்.

எம்.எம். ஸுஹைர்
(ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

லதீப் பாரூக்
(மூத்த ஊடகவியலாளர், நூலாசிரியர்)

மாஸ் எல். யூசுப்
(சட்டத்தரணி, எழுத்தாளர்)

மன்சூர் தஹ்லான்
(சன்மார்க்கப் போதகர்)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...